Pages

Sunday, October 30, 2011

தாவா பணிகளுக்கான புள்ளிகள்

தாவா பணிகளுக்கான புள்ளிகள் வழங்குதல் சம்பந்தமான முக்கிய குறிப்புகள்:

1.உங்கள் கிளை மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் எந்த நிகழ்ச்சிகளையெல்லாம் புகைப்பட ஆதாரத்துடன் unarvunet@gmail.com என்ற நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கின்றீர்களோ அது மட்டுமே புள்ளிகளுக்குரியனவையாக கருதப்படும். அது அல்லாமல் ஆதார புகைப்படங்கள் இல்லாமல் அனுப்பப்படுபவை புள்ளிக்கணக்கில் வராது.

2.மேற்கண்ட தாவா பணிகளை கிளை செய்யுமேயானால் கிளைக்கு முழுமதிப்பெண்களும் கிளைகளுடைய பணிகளுக்காக மாவட்டத்திற்கு கிளைகள் பெறக்கூடிய புள்ளிகளும், 20 சதவீதம் போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். மாவட்டமே அந்த தாவா பணிகளை செய்யுமேயானால் மாவட்டத்திற்கு முழுபுள்ளிகள் வழங்கப்படும்.

(உதாரணத்திற்கு கிராமங்களுக்கு சென்று மாற்றுமத தாவா கிளைகள் செய்தால் கிளைகளுக்கு 30புள்ளிகளும், மாவட்டத்திற்கு 20சதவீதபுள்ளிகளாக 6 புள்ளிகளுமாக
மொத்தம் 30 + 6 = 36 புள்ளிகள் வழங்கப்படும். மாவட்டமே
அதை செய்யுமேயானால் மாவட்டத்திற்கு 30 புள்ளிகள் உண்டு)

3.ஒவ்வொரு மாதமும் தாவா பணியில் முன்னிலை வகிக்கும் மாவாட்டங்களின் பட்டியலும், கிளைகளின் பட்டியலும் உணர்வு இதழிலும், இணையதளத்திலும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்…

4.பேச்சாளர்பயிற்சி முகாம்களை மாநிலத்திலிருந்து அனுப்பப்படும் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டம் தான் நடத்த வேண்டும்.

5.துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தால் அவற்றை ஸ்கேன் செய்து தலைமைக்கு அனுப்பினால் தான் அவை புள்ளிகளுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

6.புதிய ஜும்மா மர்கஸ்கள் துவங்கப்பட்டால் அவற்றை பெயர் மற்றும் ஜும்மா மர்கஸுடைய பொறுப்பாளர் விபரத்தோடு அனுப்பிவைக்க வேண்டும்

குறிப்பு:
unarvunet@gmail.com என்ற மெயில் ஐடிக்கு நீங்கள் செய்திகளை அனுப்பினாலேயே – உணர்வு இதழில் அந்த செய்தி பிரசுரிக்க தகுதியானதாக இருந்தால், உணர்வு இதழுக்கும், இணையதளத்தில் வெளியிட தகுதியானதாக இருந்தால் இணையதளத்திற்கும் ஃபார்வேட் ஆகிவிடும்.

செய்திகளுக்குண்டான புள்ளிகளின் விபரங்கள்

செயல்பாடு /புள்ளி
மாவட்ட தர்பியா 25
கிளைகளில் தர்பியா 10
வீடுவீடாக சென்று குழுவாக தனிநபர் தாவா 20
மருத்துவமனை தாவா 20
கடற்கரை தாவா அல்லது பொது இடங்களில் தாவா 20
துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் 20
பெண்கள் பயான் நடத்துதல் 10
ஏகத்துவம் ஒரு வருட சந்தா 5
தீன்குலப்பெண்மணி ஒரு வருட சந்தா 5
உணர்வு வார இதழ் ஒரு வருட சாந்தா 20
உள்ளூர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி 25
பேச்சுப்பயிற்சி முகாம்களை நடத்துதல்(மாவட்டம் மட்டும்) 20
இஸ்லாத்தில் புதிய நபர்களை இணைத்தல் 30
இனிய மார்க்கம் ரூ எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துதல் 20
வாகனப்பிரச்சாரம் ரூ மெகா போன் பிரச்சாரம் 10
கிராமங்களுக்கு சென்று மாற்றுமத தாவா 30
திருக்குர்-ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு 15
3 புத்தகங்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5
3 டிவிடிக்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5
5 சிடிக்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5
சுவர் விளம்பரம் – பேனர் வைத்தல் 30
தாவா சம்பந்தமான போஸ்டர் ஒட்டுதல் ரூ தாவா ஸ்டிக்கர் 20
கோடைகால பயிற்சி -தங்கும் வசதியுடன் 1மாணவருக்கு 5
கோடைகால பயிற்சி – டேய்ஸ் காலர்- 1மாணவருக்கு 5
திடல் தொழுகை 50
கூட்டுக்குர்பானி ஒரு மாட்டுக்கு 50
ஒரு ஆட்டுத்தோல் வசூலித்தால் 5
ஃபித்ரா – உள்ளூரில் வசூலிக்கும் 1000 ரூபாய்க்கு 10
புதிய ஜும்ஆ மர்கஸ்களை உருவாக்குதல் 25
கிளைகள் இல்லாத இடங்களில் மாவட்டப்பொதுக்கூட்டம் 25
நூலகங்கள் அமைத்தல் (முழுமையான புத்தகம்இ சிடிக்கள்) 20
நடமாடும் நூலகங்களை அமைத்தல் 25
மக்தப் மதரஸாக்களை நடத்துதல் 25
பொதுக்கூட்டங்கள் 25
தெருமுனைக் கூட்டங்கள் 10

No comments: