Pages

Wednesday, September 28, 2011

தமிழக சட்டசபைகளில் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலை

தமிழகத்தில் நடைபெற இருப்பது பதினான்காவது சட்ட சபை தேர்தல் ஆகும். இதுவரை சுதந்திர இந்தியாவில் பதிமூன்று முறை சட்ட சபை அமைத்து உள்ளார்கள் தமிழக மக்கள். தமிழ் நாடு மதராஸ் மகாணம் என்ற பெயரில் இருந்தபோதே நான்கு முறை தேர்தல் நடைபெற்று சட்ட சபையை அமைத்து உள்ளனர் தமிழக மக்கள்.


மதராஸ் மகாணம் என்ற பெயரில் இருந்தபோது 1952, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகள் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு முறை நடந்த சட்ட சபை தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளது.1952-ல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் இரண்டு மட்டுமே. 1957,1962 மற்றும் 1967-ல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் நான்கு மட்டுமே.


இந்த எண்ணிக்கையை பார்த்தால் நாம் இந்த நாட்டின் குடிமக்கள் தானா? இந்த எண்ணிக்கையில் சட்ட மன்றத்திற்கு போகத்தான் சுதந்திரம் பெற்றோமா? என்று நினைக்கத்தோன்றுகிறது.


அடுத்து மதராஸ் மகாணம் என்பதை தமிழ் நாடு என்று மாற்றியவுடன் 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் நடந்து சட்ட சபை அமைத்து உள்ளனர் தமிழக மக்கள். நமது விகிதாசாரபடி இருபது அல்லது இருபத்தைந்து முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும் ஆனால் அது இல்லை.




இதோ 1971 முதல் 2006 வரை சட்ட மன்றத்துக்கு சென்ற முஸ்லிம் உறுப்பினர்களின் விவரம் :
1971------------------ ஒன்பது முஸ்லிம் உறுப்பினர்
1977-------------------எழு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
1980------------------ ஆறு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
1984----------------- ஆறு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
1989-------------------பதிரெண்டு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
1991------------------ ஐந்து முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
1996------------------ பதினொன்று முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
2001-------------------எழு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே
2006------------------ ஆறு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே



தமிழகத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் சுமார் முப்பது தொகுதியில் வெற்றியை நிர்ணைக்க உடையவர்கள் என மார்தட்டிக்கொள்ளும் நாம் சட்ட மன்றத்தில் போவோதோ இந்த எண்ணிக்கையில்தான்.

No comments: